ஸ்ரீஹரி நாம ஜெப மொபைல் செயலி

அன்பார்ந்த ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலய மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த 14 ஆண்டு காலங்களில் பல்வேறு அளப்பரிய பல சாதனைகள் புரிந்து, ஒவ்வொரு ஆண்டும் பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவதில் நமது ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயம் பற்றி அனைவரும் நன்கு அறிவீர்கள். ஸ்ரீஹரி ஜோதிட வித்தியாலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க இந்த 15-ஆம் ஆண்டு துவக்க நாளில் புதிதாக ஒரு மொபைல் செயலியை உலகிற்கு அர்ப்பணித்து உள்ளது. ஸ்ரீ ஹரி நாம ஜப மொபைல் செயலியானது இன்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாம ஜபம் செய்வதால் ஒரு ஜீவாத்மா அடைய வேண்டிய எல்லா நிலையையும் அடைய முடியும் என்பது சாஸ்திரம் அறிந்த நாம் அனைவரும் அறிந்ததே. உலக மக்கள் அனைவரையும் நாம ஜபம் செய்து சிறப்பு வாய்ந்த சமூக சூழ்நிலையை ஏற்படவும், நமது பாரத தேசத்தின் பாரம்பரியமிக்க மிக உயர்ந்த சனாதன தர்மம் நிலை பெற்றிடவும், கலியுகத்தில் நாம ஜெபம் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்த நமது ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயம், அதற்காக பெரும் முயற்சி மேற்கொண்டு ஸ்ரீ ஹரி நாம ஜப மொபைல் செயலியை உருவாக்கி உள்ளது. மாணவர்கள் அனைவரும் இந்த ஸ்ரீ ஹரி நாம ஜபம் மொபைல் செயலியை தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து, அனுதினமும் தங்கள் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்து இறையருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இந்த ஸ்ரீஹரி நாம ஜப மொபைல் செயலியானது, முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


ஸ்ரீஹரி களஞ்சியம் செயலியின் icon


arlies_img     arlies_img