Software

about_img




வித்யாலயத்தின் ஜோதிடர் குழுவால் ஜாதகருக்கு பல்வேறு கோணங்களில் பலன் காண்பதற்கான நிலைகளை கொண்டு ஜோதிட மென்பொருள் ஒன்றை நிறுவனம் வெளியீடு செய்துள்ளது.
ஜாதக கணிதம், பலாபலன்கள் அறிதல், திருமணப்பொருத்தம், முகூர்த்த நிர்ணயம் ஆகிய விபரங்களை கொண்டு ஜோதிட மாணவர்களுக்கு பல நிலைகளில் உதவி புரியும் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் விருப்பப்படும் பொது மக்களுக்கும் வழங்கப்படும். வித்யாலயத்தின் இந்த மென்பொருள் 24.10.2016-ம் நாள் வெளியிடப்பட்டு, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி சேவையாற்றி வருகிறது.
தனியாக பென்டிரைவ் போன்ற கீ(Key) தரப்படமாட்டாது. ஏதாவது சில காரணங்களால் கணினி பழுது ஏற்பட்டால் இரண்டாவது கணினியில் பதிவிறக்கம் செய்வதற்கும் ஆக்டிவேஷன் கோடு கொடுக்கப்படும். இரண்டாவது ஆக்டிவேஷன் கோடு பெற்றுக் கொள்வதற்கு, தாங்கள் மென்பொருள் வாங்கிய தேதியிலிருந்து குறைந்தபட்சம் ஒரு வருடம் நிறைவுற்ற பின்பே இரண்டாவது கீ (Key) கொடுக்கப்படும். ஸ்ரீஹரி மென்பொருளை ஒருமுறை வாங்கிவிட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆக்டிவேஷன் கோடு மட்டுமே வழங்க இயலும். அதற்கு மேல் வழங்க இயலாது. இரண்டு கணினியும் பழுது ஏற்பட்டால் மென்பொருளை புதிதாகத்தான் வாங்கிக்கொள்ள வேண்டும்.
மென்பொருள் தொடர்பான விளக்க வீடியோ https://youtu.be/WlYg1Qmq7WA என்கிற யூடியுப் முகவரியில் வைக்கப்பட்டுள்ளது. மென்பொருள் தொடர்பான விபரங்களுக்கு 9092226465 என்கிற அலைபேசி எண்ணில் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.

about_img

ஸ்ரீ ஹரி ஜோதிட வித்யாலய மென்பொருள் மாதிரி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

 

இதனை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

 

இந்த மென்பொருளைப் பற்றிய விரிவான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.