ஆராய்ச்சி நிலை
ஆராய்ச்சி நிலை RESEARCH LEVEL


வித்யாலயத்தின் முதுநிலைப் பயிற்சியை நிறைவு செய்து ஜோதிட கலாநிதி தகுநிலை சான்று பெற்ற மாணவர்கள் ஸ்ரீஹரி ஆராய்ச்சி நிலை பயிற்சியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். ஆராய்ச்சிநிலை பயிற்சிக்கான காலம் ஒரு வருடம்.


பயிற்சி தொடர்பான விபரங்கள்


கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து, உண்மையான 25 ஜாதகங்களை சேகரித்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் ஆய்வுகள் மேற்கொண்டு, கொடுக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி புத்தகத்தில் எழுத வேண்டும்.

 • 1. சொந்த நிலத்தில் விவசாயம் செய்பவர்

 • 2. திருமணம் ஆகாதவர்
  (50 வயதுக்கு மேல்)

 • 3. அரசியல்வாதிகள்

 • 4. தொழிலதிபர்கள்

 • 5. ராணுவத்துறை

 • 6. காவல்துறை

 • 7. நீதித்துறை

 • 8. சிறை சென்றவர் .

 • 9. உணவகம் நடத்துபவர்

 • 10. காதல் திருமணங்கள்

 • 11. கலப்பு திருமணங்கள்

 • 12. விவாகரத்து பெற்றவர்கள்

 • 13. மாற்றுத்திறனாளிகள்

 • 14. நகைக்கடை உரிமையாளர்

 • 15. 60 வயது வரை புத்ரபாக்யம் இல்லாதவர்

 • 16. பால்காரர்

 • 17. மளிகைக் கடைக்காரர்

 • 18. வாகனம் பழுது நீக்குபவர்

 • 19. செவிலியர்

 • 20. வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்கள்

 • 21. ஆசிரியர்கள்

 • 22. பெரிய விபத்தை சந்தித்தவர்

 • 23. தத்துபுத்திரர்கள் உடையவர்கள்

 • 24. சிறுவயதில்பெற்றோரை இழந்தவர்

 • 25. மருத்துவர் - மனிதன்

 • 26. தொழில்முறை புகைப்பட கலைஞர்

 • 27. இரட்டை குழந்தைகள்

 • 28. உயர்கல்வி கற்றவர்

 • 29. நவாம்சுகன்

 • 30. படிக்காதவர் (10ம் வகுப்பிற்கு கீழ்)குறிப்பு: மேற்கண்ட தலைப்புகளைத்தவிர வேறு தலைப்புகளையும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் தலைப்பை கடிதம் மூலமாக தலைமைக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்ற பின்பு ஆராய்ச்சியை தொடரலாம். ஒப்புதல் கடிதத்தை ஆராய்ச்சி புத்தகத்தோடு இணைக்க வேண்டும். ஆய்விற்கு எடுத்துக் கொண்ட ஜாதகங்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படும்.

02.பயிற்சியில் இணைந்த நாள் முதல், எதிர்வரும் காலத்தில் வித்யாலயத்தால் நடத்தப்பெறும் 2 இலவச ஜோதிட முகாமில் கலந்து கொண்டு, முகாம் ஒன்றிற்கு 5 ஜாதகங்கள் வீதம் பார்வை செய்து பலன்களை வெளிப்படுத்த வேண்டும்.

03. பயிற்சியில் இணைந்த நாள் முதல், எதிர்வரும் காலத்தில் வித்யாலயத்தால் நடத்தப்பெறும் 3 பேரவைக்கூட்டங்களில் கலந்து கொண்டு, பேரவைத் தலைப்பின் கீழ் 2 பக்க அளவிலான ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும்..

04. . பயிற்சியின் நிறைவாக ஒரு குறிப்பிட்ட தினத்தில் நடத்தப்படும் வாய்மொழி தேர்வில் (VIVA) தவறாது கலந்து கொள்ள வேண்டும்.1. 25 ஜாதகங்களின் ஆய்விற்கான மதிப்பெண்கள் 25 x 20 = 500
2. 2 முகாமில் பார்க்கப்படும் 10 ஜாதகங்களுக்கான மதிப்பெண்கள் 10 x 08 = 80
3. 3 பேரவைக்கூட்டங்களில் கலந்து கொண்டு, ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவதற்கான மதிப்பெண்கள் 03 x 40 = 120
4. வாய்மொழி தேர்வு (VIVA) மதிப்பெண்கள 01 x 100= 100
மொத்த மதிப்பெண்கள் = 800

மேற்குறிப்பிட்ட 800 மதிப்பெண்களில் ஒவ்வொரு நிலையிலும் (4 நிலைகளிலும்) தனித்தனியாக 60 % மதிப்பெண்களை அவசியம் பெற வேண்டும்.


கட்டண விபரம்


இந்த ஆராய்ச்சி நிலைக்கான மொத்த கட்டணமாக ரூ.1200/-- செலுத்த வேண்டும்.இதில் பயிற்சியில் இணையும்போது ரூ.600/-- ம், ஆராய்ச்சி புத்தகம் சமர்ப்பிக்கும் போது ரூ.600/-- ம் செலுத்தப்பட வேண்டும்.


ஆராய்ச்சி நிலைக்கான விருது


மேற்கண்ட வழிமுறைகளின்படி, ஒவ்வொரு நிலையிலும், தனித்தனியாக குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்ற மாணவருக்கு, ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயத்தின் தெய்வாம்சம் பொருந்திய “ஜோதிஷ வாஷஸ்பதி” என்கிற உயரிய விருது பட்டமளிப்பு விழா மூலமாக வழங்கப்படும்.
      arlies_img